சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 582 ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.3 விழுக்காடு அதிகமாகும். உண்மையாகப் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 47 ஆயிரத்து 995 கோடி யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகமாகும்.
துறைகள் ரீதியாக பார்க்கும் போது, தயாரிப்புத் தொழில் துறையில் பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகை 11 ஆயிரத்து 955 கோடி யுவானாகவும், சேவைத் தொழில் துறையில் 35 ஆயிரத்து 42 கோடி யுவானாகவும், உயர்நிலை தொழில் நுட்பம் துறையில் 20 ஆயிரத்து 26 கோடி யுவானாகவும் திகழ்கின்றது.
பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகள் சீனாவின் மீதான முதலீட்டுத் தொகை, முறையே 39.2, 16.7 மற்றும் 16.5 விழுக்காட்டை அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
