ஜுலை மாதம் சீனச் சரக்குப் போக்குவரத்துத் தொழில் செழிப்புக் குறியீடு அறிக்கையை சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 4ஆம் நாள் வெளியிட்டது. இந்த அறிக்கையில் இக்குறியீடு தொடர்ந்து விரிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இதில், ஜுலை மாதம் புதிய முன்பதிவுப் படிவங்கள் குறியீடு, கடந்த மாதத்தில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகரித்து, 50.5 விழுக்காட்டை எட்டி, இவ்வாண்டு தொடர்ந்து 5 மாதங்களாக உயர்ந்துள்ளது. தொழிற்துறைச் சரக்குப் போக்குவத்து மேலும் சீராக வளர்வதை இது எடுத்துக்காட்டுகிறது.
பல்வகை போக்குவரத்துத் துறையின் மொத்த குறியீடு 54 விழுக்காடாக இருந்தது. இது கடந்த மாதம் இருந்ததை விட 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் பல்வகை போக்குவரத்து திட்டப்பணியின் புத்தாக்கத்தைச் செயல்படுத்தி, இருப்பு பாதை மற்றும் கடற்வழி இணைப்புப் போக்குவரத்து, தரவுகளுக்கான இணையம் முதலிய துறைகளில் மேலதிக சாதனைகள் பெறப்பட்டுள்ளன.
படம்:VCG
