சீனாவின் திறந்த மூல ஏஐ வளர்ச்சிப் பாதை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் கருத்துக்கள்

Estimated read time 1 min read

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஊடகங்கள் அண்மையில் சீனாவின் ஏஐ தொழில் வளர்ச்சி பற்றி தகவல் வெளியிட்டு, சீன நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட திறன்மிக்க திறந்த மூல மாதிரிகள் உலக சந்தைகளில் தொடர்ந்து அங்கீகாரம் பெற்று வருவதாகத் தெரிவித்தன.

அமெரிக்காவின் ஏபி செய்தி நிறுவனம், ஜெர்மனியின் Die Zeit வார இதழ் ஆகியவற்றின் இணையதளங்களில், Moonshot AI எனும் சீன நிறுவனம் வெளியிட்ட Kimi K3 எனும் புதிய ஏஐ மாதிரி பற்றிய தகவல் வெளியிடப்பட்டது. இம்மாதிரியைப் பயன்படுத்த அமெரிக்க நிறுவனங்கள் உள்பட பல நாடுகளின் உருவாக்குபவர் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Fortune இதழின் இணையதளத்தில், அமெரிக்க கொள்கையின் பாதுகாப்புவாதத்துடன், சீன மாதிரிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனின் Financial Times இணையதளத்தில், சீனா திறந்த மூல மாதிரிகளின் மூலம் ஏஐயை அதிக அளவில் பரவல் செய்வதோடு, வளரும் நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்கவும், சர்வதேச ஏஐ பயன்பாட்டு ஒத்துழைப்பு மையங்களைக் கட்டமைக்கவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author