தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில், பா.ஜ.,வை சேர்ந்தவர் முதல்வராக பதவியேற்பார் – பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ்..!!

Estimated read time 1 min read

பிரதமர் மோடியின், 76வது பிறந்த நாளையொட்டி, மத்திய அரசு செயல்படுத்திய நலத்திட்டங்கள் அடங்கிய நுால் தொகுப்பான, ‘காபி டேபிள்’ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

புத்தகத்தை சந்தோஷ் வெளியிட, முதல் பிரதியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்று கொண்டார். புத்தகத்தின் ‘டிஜிட்டல்’ பதிப்பும் வெளியிடப்பட்டது.

விழாவில், பி.எல்.சந்தோஷ் பேசியதாவது:

உலகின் பல்வேறு நாடுகளிலும், அந்நாட்டின் பிரதமர்கள் பல முறை மாறி உள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில், இங்கிலாந்தில் எட்டு முறை பிரதமர்கள் மாறி உள்ளனர்.

ஆனால், இந்தியாவில் பிரதமராக மோடி நிலையாக உள்ளார். அவர், ராணுவ உதவியாலோ, இந்திராவை போல், ‘மிசா’ சட்டத்தை பயன்படுத்தியோ, அதிகாரத்திற்கு வரவில்லை.

மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

நாட்டில் உள்ள ஐந்து பெரிய நகரங்களில், நான்கில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி உள்ளது. தமிழகத்தில், அடுத்த ஐந்து அல்லது 10 ஆண்டுகளில், பா.ஜ., முதல்வர் பதவியேற்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

You May Also Like

More From Author