சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

Estimated read time 1 min read

சென்னை தரமணி வளாகத்தில் 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமெரிக்காவின் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், சென்னை தரமணி வளாகத்தில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்தகச் சேவைகள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் நுகர்வோர் சுகாதாரப் பொருட்கள் துறைகளில் செயல்பட்டு வரும் வால்கிரீன்ஸ் நிறுவனம், தனது முதல் உலகளாவிய திறன் மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு 250 நபர்களுக்கு உயர் மதிப்பு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கம் மேற்கொள்ளும் வகையிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் GCC வளர்ச்சிப் பயணத்தில் வால்கிரீன்ஸ் இணைவதன் மூலம் தமிழகம் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் வணிகச் சேவை மையமாக திகழும் என கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author