பரவும் டெங்கு காய்ச்சல்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை….!! 

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி ஒரே நாளில் 133 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், செப்டம்பர் 17 அன்று மேலும் 244 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மிக தீவிரமாக உயர்ந்து வருகிறது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மழைக்காலம் தொடங்கும் நிலவரத்தில், கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை உடனடியாக விரிவுபடுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொண்டு, தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author