சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடர், மார்ச் 4ஆம் நாள் பிற்பகல் தொடங்க உள்ளது.
இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் லியூ ஜெயி மார்ச் 3ஆம் நாள், இக்கூட்டத்தொடரின் தொடர்புடைய தகவல்கள் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்திஊடங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 3ஆவது கூட்டத்தொடர் 4ஆம் நாள் பிற்பகல் 3 மணியளவில் துவங்கி, 10ஆம் நாள் காலையில் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.