மூன்றாவது லியாங்ச்சூ மன்றக் கூட்டம் 18ஆம் நாள் சீனாவின் ச்சே ச்சியாங் மாநிலத்தின் ஹாங்ச்சோ நகரில் துவங்கியது.
உலக பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் உடன்படிக்கையில் சீனா இணைந்து இந்த ஆண்டுன் 40 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை போல பண்பாட்டு வெளிப்பாடுகளின் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் பற்றி யுனெஸ்கோவின் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவும் இவ்வாண்டு ஆகும். பண்பாட்டு மரபுச் செல்வமும் மனித பண்பாட்டு பன்முகத்தன்மையும் என்பது இம்மன்றக் கூட்டத்தின் தலைப்பாகும். 60க்கும் மேலான நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த பண்பாட்டு மரபுச் செல்வம் பாதுகாப்பு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அருங்காட்சியங்களின் தலைவர்கள், பழைமையான பொருளாராய்ச்சியாளர்கள், வரலாற்று அறிஞர்கள் ஆகிய 300க்கும் மேலான விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
