சீனத் தொழில் முனைவோர்கள் பிரதிநிதிக் குழு அமெரிக்காவில் பயணம்

Estimated read time 1 min read

அமெரிக்க-சீன வணிகக் கவுன்சிலின் அழைப்பை ஏற்று, சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சிலின் ஏற்பாட்டில், சீனத் தொழில் முனைவோர்கள் பிரதிநிதிக் குழு ஜூலை 27 முதல் 31ஆம் நாள் வரை அமெரிக்காவின் சால்ட் லேக் நகர், சிக்காகோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் பயணம் மேற்கொண்டது. இப்பயணத்தின் மூலம், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் பெய்ஜிங் சந்திப்பின்போது உருவாக்கிய முக்கிய ஒத்தக் கருத்துக்களை, இரு நாட்டு தொழில் மற்றும் வணிக துறையில் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்துவதும், பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் பயனுள்ள ஒத்துழைப்புகளும் முன்னேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 22 சீனத் தொழில் நிறுவனங்கள் இப்பிரதிநிதிக் குழுவுடன் பயணம் மேற்கொண்டன.

இப்பயணத்தின்போது, சர்வதேச வர்த்தக முன்னேற்றத்துக்கான சீனக் கவுன்சில், அமெரிக்காவின் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, சீன-அமெரிக்கத் தொழில் மற்றும் வணிகத் தொடர்புக்கான பல நிகழ்வுகளை நடத்தியதோடு, 120க்கும் மேலான அமெரிக்கத் தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் மற்றும் பரிமாற்றக் கூட்டங்களை நடத்தியது.

You May Also Like

More From Author