ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிப்ரவரி 28 தாக்குதலில், அவரது மகனும் தற்போதைய புதிய தலைவருமான மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார்.
அது எப்படி என்பது குறித்த ரகசிய உரையாடல் அடங்கிய ஆடியோ தற்போது வெளியாகி உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் நடத்திய ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற தாக்குதலில் அலி கமேனி தங்கியிருந்த இல்லம் ஏவுகணைகளால் தகர்க்கப்பட்டது.
இதில் அலி கமேனி கொல்லப்பட்டார்.
அப்போது அவருடன் இருந்த மொஜ்தபா கமேனி, தாக்குதல் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான் ஏதோ ஒரு பணிக்காக கட்டிடத்திற்கு வெளியே உள்ள முற்றத்திற்குச் சென்றுள்ளார்.
அதில் அவர் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்ரேல் தாக்குதலில் தப்பியது எப்படி?
