பாரம்பரிய சீன மருத்துவ அறிவுகளுக்கான பாதுகாப்பு விதிகள் நவம்பர் 9ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2027ஆம் ஆண்டின் ஜெனவரி முதல் நாளில் நடைமுறைக்கு வரும் இந்த விதிகள், பாரம்பரிய சீன மருத்துவ அறிவைப் பாதுகாப்பது தொடர்பான சீனாவின் முதல் நிர்வாக ஒழுங்குமுறையாகும்.
பாரம்பரிய சீன மருத்துவ அறிவு என்பது, சீன தேசத்தால் தலைமுறை தலைமுறையாக பரவல் செய்யப்பட்டு வளர்க்கப்பட்ட மருத்துவ அறிவுகளின் புதையல் ஆகும். இது ஏராளமான பாரம்பரிய சீன மருத்துவக் கோட்பாடுகள், நுட்பங்கள் மற்றும் செவ்வியல் மருந்து முறைகளை உள்ளடக்கியிருக்கிறது. மேலும், நோய்த்தடுப்பு, சுகாதாரப் பராமரிப்பு, நோய்ச் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் இது தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.
