14வது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் ஜுன் 27ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை சீனாவின் தியேன் ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது. 100க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1500 பேர் இம்மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அவர்கள், வணிகம், அரசியல், சமூக அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வி துறைகளின் தலைமை பிரமுகர்களாவர். புத்தாக்கம் மற்றும் தொழில் துவக்கத்துக்குப் புதிய உந்து சக்தியை ஊட்டுவது, மேலும் நியாயமான தொடரவல்ல மற்றும் உறுதி தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தை உருவாக்குவது முதலியவை, இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும். தவிரவும், கடன் பிரச்சினை, நிதி நிதானம், வானிலை மாற்றத்துக்கு சமாளிப்பு நடவடிக்கைகள் முதலிய அம்சங்களும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
14வது கோடைகால டாவோஸ் மன்றக் கூட்டம் துவக்கம்
You May Also Like
வட கொரியாவின் 76வது தேசிய தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
September 9, 2024
செர்பியாவில் ஷிச்சின்பிங் பயணம் துவக்கம்
May 8, 2024
உலகப் புத்தாக்கக் குறியீட்டில் முதல் 10 நாடுகளில் இடம் பிடித்தது சீனா
September 17, 2025
