மொராக்கோவுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு தொடர்ந்தால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையலாம் என்று தெரிவித்தார்.
ரபாத்தில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், பிரதம மந்திரி நரேந்திர மோடியின் முந்தைய கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில், ஆபரேஷன் சிந்துர் ஒரு தற்காலிக இடைநிறுத்தம் மட்டுமே என்று கூறினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு உறுதியான பதிலடியாக அமைந்த இந்த நடவடிக்கை, பாகிஸ்தானின் நடவடிக்கைகளைப் பொறுத்து ஆபரேஷன் சிந்தூர் இரண்டாம் அல்லது மூன்றாம் கட்டத்திற்கு செல்லக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
பாகிஸ்தான் நடந்துகொள்வதைப் பொறுத்து ஆபரேஷன் சிந்தூர் 2.0: பாதுகாப்புத் துறை அமைச்சர்
