கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து..!!

Estimated read time 1 min read

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக தற்போது இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாளை (22-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரையில் இரவு நேர மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரையில் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி (5 மணி நேரம்) வரையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

அதன்படி, வருகிற 25-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரையில் (வாரநாட்களில் மட்டும்) ரத்து மற்றும் பகுதி நேர ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-

* கடற்கரையில் இருந்து இரவு 10.20, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

* திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும், செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.

* கடற்கரையில் இருந்து வருகிற 26-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரையில் (வாரநாட்களில்) அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல, வருகிற 30 மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) ரத்து மற்றும் பகுதிநேர ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்களின் விவரங்கள் வருமாறு:-

* கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், தாம்பரத்தில் இருந்து இரவு 11, 11.40 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

* கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.

கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும்.

மேலும், கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு தாம்பரம் செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author