தெருக்குரல் அறிவு கைது கண்டிக்கத்தக்கது – உதயநிதி ஸ்டாலின்

Estimated read time 1 min read

பாடகர் அறிவு கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் என் அன்பு சகோதரருமான ‘தெருக்குரல்அறிவு அவர்களைக் கைது செய்தமைக்கு விஜய் தலைமையிலான தமிழக அரசை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரது குரல், தமிழ்நாட்டின் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் #நீட் தேர்வுக்கு எதிரான தலைமை நீதிபதி தலைமையிலான பேரணிகளும் போராட்டங்களும் வேகம் பெற்று வரும் வேளையில், தவெக அரசு, அறிவு அவர்களைக் கைது செய்துள்ளது.நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கத் திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தியாகும். நீட் தேர்வு முறைகேடுகளால் நிறைந்தது மட்டுமல்ல; அது ஒரு மோசடியாகவும் மாறிவிட்டது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பப்படும் குரல்கள் கேட்கப்பட வேண்டுமே தவிர, அடக்கப்படக் கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author