அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் மற்றும் சோமாலிய கடற்பகுதிகளில் 22 இந்திய மாலுமிகளுடன் இரண்டு வணிக கப்பல்கள் அடுத்தடுத்து கடத்தப்பட்டுள்ளன.
ஏடன் வளைகுடாவில் ஏமன் நாட்டுக் கரையில் இருந்து சுமார் 30 நாவ்டிகல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த ‘எம்.டி. சிபு 1’ என்ற கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற கப்பலை ஆயுதம் ஏந்திய ஆறு கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.
எரித்திரியா நாட்டின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் மொத்தம் உள்ள 20 ஊழியர்களில் 16 பேர் இந்தியர்கள் ஆவர்.
கப்பலில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதியில் 22 இந்தியர்களுடன் 2 கப்பல்கள் கடத்தல்: கடற்கொள்ளையர்கள் கைவரிசை
