மத்திய அரசுப் பணிகளுக்கான பணியாளர் தேர்வாணையம் (SSC), 2026-2027 ஆம் ஆண்டிற்கான தற்காலிக தேர்வு கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சிஜிஎல், சிஎச்எஸ்எல், எம்டிஎஸ் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான தேர்வர்களுக்குத் தெளிவான திட்டமிடல் கிடைத்துள்ளது.
அனைத்துத் தேர்வுகளும் கணினி வழித் தேர்வுகளாகவே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையின்படி, பட்டதாரி நிலைத் தேர்வான சிஜிஎல் 2026 அறிவிப்பு மார்ச் 2026 இல் வெளியாகி, தேர்வுகள் மே அல்லது ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன.
அதேபோல், சிஎச்எஸ்எல் தேர்வுகள் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலும், பத்தாம் வகுப்பு தகுதியிலான எம்டிஎஸ் & ஹவல்தார் தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு வேலைவாய்ப்பு: எஸ்எஸ்சி 2026-27 ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு
