சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்துள்ளது.
அதிகபட்சமாகச் சென்னை தரமணியில் 49.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று 23.08.2026 காலை 8:30 மணி முதல் இன்று 24.08.2026 அதிகாலை 5:30 மணி வரை பதிவான மழை அளவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை & புறநகர் பகுதிகள்:
தரமணி (சென்னை): 49.5 மி.மீ
வில்லிவாக்கம் (திருவள்ளூர்): 44.5 மி.மீ
பூந்தமல்லி (திருவள்ளூர்): 44.0 மி.மீ
ACS மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்): 39.0 மி.மீ
மீனம்பாக்கம் (சென்னை): 31.1 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை): 27.4 மி.மீ
செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்): 26.0 மி.மீ
கொளப்பாக்கம் (காஞ்சிபுரம்): 25.0 மி.மீ
பள்ளிக்கரணை NIOT (சென்னை): 23.1 மி.மீ
மாதவரம் (சென்னை): 21.5 மி.மீ
புழல் (திருவள்ளூர்): 18.0 மி.மீ
பிற மாவட்டங்கள்:
ராணிப்பேட்டை: 27.5 மி.மீ
அரியலூர்: 22.5 மி.மீ (செந்துறை – 17.0 மி.மீ)
வால்பாறை (கோவை): 19.0 மி.மீ
லோயர் கோதையார் (கன்னியாகுமரி): 17.0 மி.மீ
ஈரோடு: 15.0 மி.மீ
மயிலாடுதுறை: 13.5 மி.மீ
திருப்பத்தூர்: 10.5 மி.மீ
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் விடிய விடிய பெய்த இந்த மழையால் பகலில் வாட்டிய வெப்பம் தணிந்து அதிகாலை முதலே குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
