சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,320 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க முந்தைய திட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், இதில் சுமார் 3,750 ஏக்கர் தனியார் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட இருந்ததால் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை மாற்று இடத்திற்கு மாற்ற முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையின் 2-வது விமான நிலையம்: பரந்தூருக்குப் பதில் மாற்று இடம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
