தமிழகத்தில் காற்று வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக கடலோர மாவட்டங்களில், 45 கி.மீ- 55 கி.மீ. வரை சூறைகாற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என IMD எச்சரித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்தில் கடல் வழக்கத்தை விட கொந்தளிப்பாக காணப்பட்டது.
தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதற்கிடையே வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என கணித்துள்ளது.
அதோடு, நாளை மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இரு நாட்களுக்கு 55 கி.மீ. வரை சூறைகாற்று வீசும் எனவும் எச்சரித்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: IMD
