இந்தியாவின் 21 வயதான இள இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இறுதிப்போட்டியின் ஆரம்பக் கட்டத்தில் பிரக்ஞானந்தா கணிசமான பின்னடைவைச் சந்தித்தார்.
முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்து, இரண்டாவது ஆட்டத்தை டிராவில் முடித்ததால் 3-9 என்ற புள்ளிக் கணக்கில் கருவானாவை விட 6 புள்ளிகள் பின் தங்கியிருந்தார்.
இதன் பிறகு அபாரமாக மீண்டு வந்த பிரக்ஞானந்தா, ரேபிட் பிரிவின் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளைச் சேர்த்து 11-9 என முன்னிலை பெற்றார்.
கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை
