அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான முன்னேறிய மண்டலமான குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம்

Estimated read time 1 min read

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்க மையத்தின் கட்டுமானம் என்ற நெடுநோக்கு இலக்கை நோக்கி, சீனாவின் குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம், உலக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான முன்னேறிய மண்டலத்தை முயற்சியுடன் உருவாக்கி, புதிதாக வளரும் தொழில் துறை வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் முன்பு தெரிவித்தார்.

தற்போது, பெரிய விரிகுடா பிரதேசத்தில், சராசரியாக நாள்தோறும் 400 கண்டுபிடிப்புகளின் அறிவுசார் காப்புரிமைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு, “ஷென்ட்சென்-ஹாங்காங்-குவாங்சோ புத்தாக்க கிளஸ்டர்”, உலகளாவிய 100 முன்னேறிய புத்தாக்க கிளஸ்டர்கள் என்ற தரவரிசையில் முதன்முறையாக முதலிடத்தைப் பெற்றது.

ஒரு தொகுதியான கொள்கைகளின் ஆதரவுடன், குவாங்தொங், ஹாங்காங், மக்கௌ ஆகிய மூன்று இடங்களுக்கிடையில், மனிதர்கள், நிதி, சரக்கு பொருட்கள், தகவல்கள் முதலியவற்றின் பரிமாற்றம் விரைவுபடுத்தப்படுவது, புத்தாக்க இயக்காற்றலை அதிகரித்துள்ளது.

இதுவரை, பெரிய விரிகுடா பிரதேசத்தில், 2 தேசிய ஆராய்ச்சிக் கூடங்கள், 45 முக்கிய ஆராய்ச்சிக் கூடங்கள், 33 குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ கூட்டு ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவை கட்டியமைக்கப்பட்டு, பல்நிலை மற்றும் உயர்தர அறிவியல் ஆராய்ச்சி அமைப்புமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பிரதேசத்தில், தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில் துறையின் அளவு 22 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 1 லட்சம் கோடி யுவான் மதிப்புடைய 9 தொழில் துறை கிளஸ்டர்கள் உயர்தர வளர்ச்சியை வலுப்படுத்தி வருகின்றன. நாட்டின் 0.6 விழுக்காடான நிலப்பரப்புடைய குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசம், ஒன்பதில் ஒரு பகுதியான பொருளாதார மதிப்பை உருவாக்கி, சீனாவில் மிகப் பெரிய அளவிலான திறப்பு மற்றும் மிக அதிக பொருளாதார உயிராற்றல் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author