“சோதனைகளை அதிமுக முறியடிக்கும்”- இபிஎஸ்

Estimated read time 0 min read

ஜனநாயக படுகொலை செய்து இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகள். ஆனால், தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் எனவும், அவரை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க பொதுக்குழுவைக் கூட்ட தொண்டர்கள் கூடி வருவதாகவும் வெளியான தகவலால் எடப்பாடி தரப்பு அதிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து கருத்துதெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “அரை மணி நேரம் பேசினாலே கொத்து பரோட்டா என்ற விஜய், இந்த தேர்தலுக்கு தெருத்தெருவாக அலைந்து விசில் ஊதும் நிலை ஏற்பட்டது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மம் வெல்லும் என்பது ஆண்வரின் தீர்ப்பு. முதல்வராக இருந்தபோதே சந்தித்த பிரச்சனைகள் எக்கச்சக்கம். இந்த சோதனைகளை அதிமுக முறியடிக்கும். அதிமுக ஒரு ஆலமரம், ஆயிரம் காலத்து பயிர். இன்னும் பல தலைமுறைகளுக்கு தமிழர்களுக்கு பாடுபடப்போகும் இயக்கம். இருதொகுதிகளின் வெற்றியால் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது என்றாலும் நமக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளன. ஜனநாயக படுகொலை செய்து இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ரீல்ஸ் ஆட்சியில் ரீல்ஸ்களில் மயங்கி மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இருதொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!” எனக் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author