இன்று தான் கடைசி நாள் : பெடரல் வங்கியில் வேலைவாய்ப்பு: ஆண்டுக்கு ரூ.11 லட்சம் வரை சம்பளம்!

Estimated read time 1 min read

பெடரல் வங்கியின் சென்னை, திருச்சி, சேலம், ஓசூர் கிளைகளில் சேல்ஸ் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்; வங்கித்துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆண்டுக்கு ரூ.4.64 லட்சம் முதல் ரூ.10.93 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் இன்று 31-ம் தேதிக்குள் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்று பெடரல் வங்கி. கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கி தனியார் வங்கி நிறுவனமாகும்.தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்ற விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள்:

சேல்ஸ் ஆபிசர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை, திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய நகரங்களில் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். வங்கி, நிதி நிறுவனம், காப்பீட்டு நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 01.08.1991 – தேதிக்கு முன்பு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4.64 லட்சத்தில் இருந்து ரூ.10.93 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை: தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெடரல் வங்கியின் இணையதளத்தில் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. https://www.federal.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி :

பெடரல் வங்கியின் கேரியர் பக்கத்தில் டேலண்ட் கனெக்ட்டில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே டேலண்ட் கனெக்டில் பதிவு செய்து இருந்தால், சமீபத்திய விவரங்களை உங்கள் சுயவிரங்களில் அப்டேட் செய்யவும். சிவி அப்டேட் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்ட தேர்வு முறைக்கு அழைக்கப்படுவார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author