சின்னத்திரை நாடகங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் தனது சீரியல் பயணத்தை தொடங்கிய நிலையில் ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லேட் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ரித்திகா இறுதியாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்திருந்தார்.
அதன் பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பெரிய புகழை பெற்றார். இந்த நிலையில் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்ததும் சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் ரித்திகா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். தற்போது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.