தென் கொரிய விஞ்ஞானிகள் மாட்டிறைச்சியிலுள்ள செல்களைக் கொண்டு புதிய அரிசியை கண்டுபிடித்துள்ளார்கள். ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்த மாட்டு இறைச்சி செல்களை, அரிசி தானியங்களில் செலுத்தி இந்த புதிய செறிவூட்டப்பட்ட அரிசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இது வழக்கமான அரிசியை விட 8% அதிக புரதமும் 7% அதிக கொழுப்பும் கொண்டதாக இருக்கிறது. இந்த இறைச்சி அரிசி சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும், இளஞ்சிவப்பு நிறத்துடன் வெண்ணைய் வாசனையை கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.