சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின்படி, அக்டோபர் 25ஆம் நாள், சீன மற்றும் இந்திய இராணுவப் படைகள், மார்தோ-ஷூசுலேல் தளத்தின் இந்திய பகுதியில், எல்லை பிரதேசத்தின் மேற்கு பகுதிக்கான 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தையை நடத்தின. குறிப்பிட்ட பகுதியிந் கட்டுப்பாட்டுப் பிரச்சினை குறித்து இரு தரப்பும் ஆக்கப்பூர்வமாகவும் ஆழமாகவும் பரிமாறிகொண்டுள்ளன. இரு நாடுகளின் தலைவர்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களின் வழிக்காட்டலில், இராணுவம் மற்றும் தூதாண்மை வழிமுறையின் மூலம் தொடர்புமேற்கொண்டு, சீன-இந்திய எல்லை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று இரு தரப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
சீன-இந்திய எல்லையின் மேற்கு பகுதி பிரச்சினைக்கான 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தை நடைபெற்றது
You May Also Like
கம்யூனிஸ்ட் கட்சி சார்பற்ற பிரமுகர்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
October 24, 2025
சீனாவின் எரியாற்றல் மாற்றத்தால் பெறப்பட்டுள்ள சாதனைகள்
August 29, 2024
