196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் –

Estimated read time 1 min read

196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு..

110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில்,

“தமிழ்நாட்டில் 196 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுடைய புதிய மின்பாதைகள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மின்பாதைகள் வலுப்படுத்தப்படும். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தமிழ்நாடு மின்பரிமாற்ற மேம்பாட்டுத் திட்டம்) மூலம் 33 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.

மேலும், தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிகல் வெப்ப மின் நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி, 800 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளுடன், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட New Supercritical Thermal Power Station 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.

Image

You May Also Like

More From Author