யுபிஎஸ்சி ஆணையம் மத்திய அரசின் 45 பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு விளம்பரத்தை வெளியிட்டது.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்த நேரடி நியமன ஆட்சேர்ப்பு விளம்பரத்தை ரத்து செய்ய யு.பி.எஸ்.சி-க்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் மூலம் மகிழ்ச்சி தெரிவித்தார். இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.
“இந்தியா கூட்டணியின் கடும் எதிர்ப்புக்குப் பணிந்து நேரடி நியமனங்கள் தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் உரிமைகளைப் பாதுகாக்க நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்” என தெரிவித்துள்ளார்.