“ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்” நிகழ்ச்சி ஒளிப்பரப்பு SCO நாடுகளில் துவக்கம்

Estimated read time 1 min read

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2026ஆம் ஆண்டின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்”நிகழ்ச்சியின் துவக்க ஒளிப்பரப்பு நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் நாள் கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது. இதற்காக கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் ஜபரோவ்  எழுதிய வாழ்த்து செய்தியில், இந்த நிகழ்ச்சியின் ஒளிப்பரப்புக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, கிர்கிஸ்தான் தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையமும் சீன ஊடகக் குழுமமும் கூட்டாக நடத்திய நிகழ்வுக்கு பாராட்டு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 30ஆம் நாள் முதல், கிர்கிஸ்தான், பெலாரஸ், இந்தியா, கசகஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் முக்கிய ஊடகங்களில் இந்நிகழ்ச்சிஒளிபரப்ப தொடங்கியுள்ளது.

ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்”நிகழ்ச்சியானது, பொருளாதார வளர்ச்சி, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கம், சூழலியல் நாகரிகம், சமூக வாழ்வாதாரம் உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்டது. அதோடு, சீனாவின் பழங்கால புத்தகங்களில்  ஷிச்சின்பிங் குறிப்பிட்ட அதிசிறந்த மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author