சீனக்கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும்
, அரசுத்
தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங்
எழுதிய “உலக வளர்ச்சி
முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு, உலக ஆட்சிமுறை
முன்மொழிவு ஆகியவற்றின் நடைமுறையாக்கத்தை முன்னேற்றுதல்”என்ற தலைப்பிலான முக்கிய கட்டுரை, அக்டோபர்
16ஆம் நாள் ச்சூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல்
2025ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் வரை ஷி ச்சின்பிங்கின் முக்கிய கருத்துக்கள்
இந்தக் கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.
இக்கட்டுரையில்,
வளர்ச்சி என்பது, பொது மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதன் முக்கிய அம்சமாகும்.
பாதுகாப்பானது, வளர்ச்சியின் முன்நிபந்தனையாகும். மனித குலம், பிரிக்கப்பட முடியாத
பொது சமூகமாகும். பல்வகைமை கொண்ட நாகரிகமானது, உலகத்தின் உண்மையான தோற்றமாகும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
பல்வேறு நாடுகளுடன் இணைந்து, மேலும் நியாயமான மற்றும் நேர்மையான உலக ஆட்சிமுறை
அமைப்புமுறையின் உருவாக்கத்தை முன்னேற்றி, மனித குலத்தின் பொது எதிர்காலச்
சமூகத்துக்கு கூட்டாக முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.