இன்னும் 5 ஆண்டுகளில் ஒயிட் காலர் வேலைகளை ஏஐ முழுங்கிவிடும் என கணிப்பு  

Estimated read time 0 min read

முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான அந்த்ரோபிக்கின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி, ஒயிட் காலர் வேலைகளில் கணிசமான பகுதி ஏஐயால் அகற்றப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.
பிபிசி ரேடிகல் நேர்காணலில் அவர் பேசுகையில், சட்டம், ஆலோசனை, நிதி மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படும் ஒரே விதமான பணிகளை, ஏஐ ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் தானியங்கு முறையில் செய்துவிடும் என்று கணித்துள்ளார்.
சட்ட நிறுவனங்களில் ஆவணங்களை ஆய்வு செய்வது போன்ற வேலைகளை ஏஐ மிகச் சிறப்பாகச் செய்யும் என்று அமோடி சுட்டிக்காட்டினார்.
பல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு கருவியாக ஏஐயைப் பார்க்காமல், செலவுகளைக் குறைக்கும் வழியாகவே கருதுவதாக அவர் கூறினார்.

You May Also Like

More From Author