ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Estimated read time 1 min read

ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள மகாநதி ஆழ்கடல் படுகையில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி, இயற்கை எரிவாயுவைக் வெற்றிகரமாக கண்டறிந்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர்களால் கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி மகாநதி ஆழ்கடல் பகுதியில் இந்த ஆய்வுப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

ஆழ்கடல் தரவுகளின் மதிப்பீட்டிற்குப் பிறகு எரிவாயுக் கிணற்றில் துளையிடப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் ஆரோக்கியமான அழுத்தத்துடன் எரிவாயு வெளிப்படுவது உறுதி செய்யப்பட்டது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு விதிகள் 2025இன் கீழ், இந்த எரிவாயு வளங்களை விரைவாக உற்பத்திக்குக் கொண்டுவர முடியும்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்கடலில் தீவிரப்படுத்தியுள்ள இந்த ஆய்வுகள், இந்தியாவின் எரிசக்தித் துறையில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இது இந்தியாவின் கடல்சார் எரிசக்தி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல் எனப் பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு வழிகாட்டுதலின்கீழ் தொடங்கப்பட்ட சமுத்திர மந்தன் திட்டத்தின் ஒரு பகுதியாக ONGC இந்தியாவின் ஆழ்கடல் எல்லைகளை ஆராய்வதன் மூலம் புதிய உள்நாட்டு எரிசக்தி ஆதாரங்களைத் தொடர்ந்து கண்டறிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கண்டுபிடிப்பு ஆழ்கடல் வளங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஒரு பாதையை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author