பிரதமர் நரேந்திர மோடியை மையப்படுத்தி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட விவகாரத்தில், மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மற்றும் சில சமூக வலைதளப் பயனர்கள் மீது ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.
டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களின் போது, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையிலும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் வகையிலும் மாற்றியமைக்கப்பட்ட வீடியோக்கள் பரப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக போலி வீடியோ பரப்பிய விவகாரத்தில் மெட்டா இந்தியா தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மீது வழக்குப் பதிவு
