சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் தூங்ஜூன் 24ஆம் நாள் அழைப்பிற்கிணங்க ரஷியாவில் பயணம் மேற்கொண்ட போது ரஷிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் பெலோவுசோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு ராணுவ உறவு, சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை, பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் ஆகியவை குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அரசுத் தலைவர் புதினின் நெடுநோக்கு வாய்ந்த தலைமையில், சீன-ரஷிய உறவு எப்போதும் உயர் நிலையான ஆரோக்கிய வளர்ச்சியை நிலைநிறுத்துமெனவும் ஒருமனதாகக் கருதினர். மேலும், இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களைப் பின்பற்றி நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்திப் பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்கவும், உலகின் நியாயம் மற்றும் சர்வதேச ஒழுங்கைக் கூட்டாகப் பேணிக்காத்து இரு நாட்டுறவின் உயர் தர வளர்ச்சிக்குப் புதிய உந்து ஆற்றலைக் கொண்டு வரவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
சீன-ரஷிய தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
You May Also Like
நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலநலக்குறைவால் காலமானார்
July 13, 2025
அமெரிக்க விண்கலம் மீண்டும் நிலவில் தரையிறங்கியது
February 23, 2024
