நியூசிலாந்தில் வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான சிறப்பு நடவடிக்கை

Estimated read time 1 min read

வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை, உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி 8ஆம் நாள், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் காணொளி மூலம் உரை நிகழ்த்தினார்

ஷென் ஹைய்சியோங் கூறுகையில், வசந்த விழா கொண்டாட்டத்துக்கான சீன ஊடகக் குழுமத்தின் கலை நிகழ்ச்சிகள் 43 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டு, சீன ஊடகக் குழுமம், “5G+4K/8K+AI” என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, 85 மொழிகளின் மூலம், உலகளவில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான பண்பாட்டு நிகழ்ச்சியை வழங்கும் என்றார்.

You May Also Like

More From Author