பிரேசிலிலுள்ள நட்பார்ந்த துறையினர்களுக்கு அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பதில் கடிதம் ஒன்றை அனுப்பினார். சீனா-பிரேசில் நட்பு இலட்சியத்துக்குத் தொடர்ந்து பங்களிக்க அவர்களை இக்கடிதத்தில் ஷிச்சின்பிங் ஊக்குவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், பிரேசிலுடன் இணைந்து இரு நாட்டு நட்பார்ந்த கால உள்ளடக்கங்களைத் தொடர்ந்து செழிப்பாக்கச் சீனா விரும்புகின்றது.
இரு நாட்டு உறவு, பெரிய வளரும் நாடுகளுக்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, கூட்டு வளர்ச்சி, ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் முன்மாதிரியாகத் திகழ்கின்றது. இரு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறையினர்கள், இரு நாட்டு உறவின் தொடர்ச்சியான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
அண்மையில், நூற்றுக்கும் மேற்பட்ட பிரேசில் நாட்டு மக்கள் நட்புடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கிற்குக் கடிதம் அனுப்பினர். சீன அரசு, தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை பிரேசிலுக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்பு பரிமாற்றங்களுக்கும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஆற்றியுள்ள பங்குகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.