உரங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ள போதிலும், விவசாயிகள் மீது விலை உயர்வின் சுமை விழாமல் இருக்க 16 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உறுதியற்ற சூழ்நிலைகள் நிறைந்த இன்றைய உலகில், இந்தியாவின் விரைவான வளர்ச்சி உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
நாளை, அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படும் நிலையில், ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சியில் இளைஞர்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் காமாக்யா வரையிலும் வசிக்கும் மக்கள், சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தி, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால், உரங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், விவசாயிகள் மீது விலை உயர்வின் சுமை விழாமல் இருக்க 16 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
