தொடர்ந்து சரியும் தங்கம் விலை: நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

Estimated read time 1 min read

தங்கம் விலை தினந்தோறும் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது. குறிப்பாக கடந்த வாரத்தில் ஏறும்போது அதிகமாகவும், இறங்கும்போது சொற்ப அளவிலும் குறைந்து வாடிக்கையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை கூட்டும்போது, உலகளவில் தங்கம் விலை குறையும் என்று நிபுணர்கள் கூறிவந்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக, ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியும் இந்தியாவில் தங்கம் விலை குறைந்தபாடில்லை.

சொல்லப்போனால், வட்டி விகித ஏற்றத்திற்கு பிறகு தான் தங்கம் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது. எனினும், ஒரு முறை வட்டி ஏற்றத்தில் தங்கம் விலை அவ்வளவாக குறையாது என்றும், குறைந்தது 2 முறை வட்டி விகிதம் ஏற்றப்பட்டால் தான் தங்கம் விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று (செப்டம்பர் 21) தங்கத்தின் விலை ரூ.120 குறைந்தது. தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.260-க்கு விற்பனையானது.

இன்று (செப்டம்பர் 22) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்து, ரூ.1,13,480-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.255-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,55,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது

You May Also Like

More From Author