2026 இல் 2500 கோடி யுவானை தாண்டிய சீனாவின் திரைப்பட மொத்த வசூல்

Estimated read time 0 min read

இணையதளத் தரவுகளின்படி, இதுவரை 2026ஆம் ஆண்டில் சீனாவின் திரைப்படங்களின் மொத்த வசூல் தொகை 2500 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

கோடைக்கால திரைப்படப் பருவத்தில் தொடர்ந்து 34 நாட்களாக தினசரி வசூல் 10 கோடி யுவானுக்கும் அதிகமாக இருந்தது. திரைப்படப் பார்வை எண்ணிக்கையும் 63 கோடியைத் தாண்டியது.

ஆகஸ்ட் 11ஆம் நாள் நாடு முழுவதிலும் வெளியான ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் தி மிடில் ஈஸ்ட் எனும் சீனாவின் போர் எதிர்ப்புத் திரைப்படம் சிறப்பான தொடக்கத்தோடு, 46 கோடி யுவானுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது.

இத்திரைப்படம் வெளியான 15 மணி நேரத்திற்குள் 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்ததுடன், அப்படம் தொடர்பான மக்களின் வரவேற்பும் மதிப்பீடும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author