உலகத்தின் முன்னணியிலுள்ள சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் தொழில் நுட்பம்

Estimated read time 1 min read

2026ஆம் ஆண்டு உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய அறிக்கையை, சீன நிறுவன சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டுச் சங்கம் நவம்பர் 7ஆம் நாள் வெளியிட்டது. தரவுகளின்படி, உலகளாவிய மிகப் பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ச்சியடைந்த புதுப்பிக்கவல்ல எரியாற்றல் அமைப்புமுறையை சீனா உருவாக்கியுள்ளது.

இவ்வறிக்கையின்படி, தற்போது, புதைபடிவ எரியாற்றல்களின் பயன்பாடு, உலகளவில் கார்பன் வெளியேற்றத்தின் மிகப் பெரிய காரணமாகும். 2025ஆம் ஆண்டு, உலகளவில் எரியாற்றலுடன் தொடர்புடைய கார்பன் வெளியேற்றத்தின் மொத்த அளவு 3840 கோடி டன்னை எட்டி, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.4 விழுக்காடு அதிகமாகும். இதில் சீனாவில் கார்பன் வெளியேற்ற அளவு 0.5 விழுக்காடு குறைந்தது. அமெரிக்காவில் கார்பன் வெளியேற்ற அளவு 2.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டு, சீனாவின் எரியாற்றல் முதலீட்டுத் தொகை  94 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டி, உலகத்தில் முதலிடம் பெறக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் தொழில் நுட்பம் உலகத்தின் முன்னணியில் இருந்து, உலகத்துக்கு 70 விழுக்காடான காற்று ஆற்றல் மின்சார உற்பத்தி சாதனங்களையும், 80 விழுக்காடான ஒளிமின்னழுத்த ஆற்றல் உற்பத்திச் சாதனங்களையும் வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author