நக்சலிச ஒழிப்புக்கு பின் வரும் முதல் தீபாவளி- பிரதமர் மோடி

Estimated read time 0 min read

நக்சலிசம், மாவோயிச தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிக்கு பின் முதல் தீபாவளி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர், பஸ்தரில் நக்சல் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, “நக்சலிசம், மாவோயிச தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றிக்கு பின் முதல் தீபாவளி, நக்சலிச அச்சத்திலிருந்து கோடிக்கணக்கான மக்கள் விடுபட்டுள்ளனர். முன்பு நக்சலிசம் இருந்த பகுதிகளில், தற்போது வளர்ச்சி என்ற நிலையை உருவாக்கி உள்ளோம் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு வலுவாக இருக்கும்போது, வெளிநாட்டு எதிரிகளால் வெற்றி பெற முடியாது. உள்நாட்டு பாதுகாப்பு பலவீனமடையும் போதுதான், வெளிநாட்டு எதிரிகளும் தலைதூக்கத் தொடங்குவார்கள்.

மாவோயிஸ்ட்டுகளை எதிர்த்து நமது வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். பஸ்தர் பகுதியை நக்சல் இல்லா இடமாக நமதுபடைகள் மாற்றியுள்ளனர் நக்சல் குழுவினருக்கு எதிரான போர் எளிதானது அல்ல. நக்சல் பயங்கரவாதத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author