சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்  

Estimated read time 1 min read

பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக, ரூ.6.04 கோடி செலவில் நிறுவப்பட்ட 50 தானியங்கி குடிநீர் ஏ.டி.எம். இயந்திரங்கள், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் மூலம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் பாட்டில்களில் தங்களுக்குத் தேவையான அளவான 150 மில்லி லிட்டர் மற்றும் 1 லிட்டர் என இரண்டு அளவுகளில் நீரை பெறலாம்.
ATM இயந்திரங்கள் முன் வடிகட்டல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்(RO), புற ஊதாக் கதிர்கள் உள்ளிட்ட மூன்று அடுக்குகளில் நீரை சுத்திகரித்து தேசிய தரத்திற்கு இணையான நீரை வழங்குகின்றன.

You May Also Like

More From Author