“தாராபுரத்தை தன்வசப்படுத்த வரும் விஜய்” – அக்டோபர் 4-ல் பிரம்மாண்ட பிரசாரம்…. சூடாகும் தேர்தல் களம்….!! 

Estimated read time 1 min read

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரான விஜய் களமிறங்கவுள்ளது தேர்தல் களத்தில் பெரும் சூட்டை கிளப்பியுள்ளது.

பிரசாரத்தின் இறுதி நாளான அக்டோபர் 4-ஆம் தேதி, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து விஜய் பிரம்மாண்ட ரோடு ஷோ (Road Show) மற்றும் வாகனப் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரசாரக் களத்தின் கடைசி நாளில் கட்சித் தலைவரின் இந்த அதிரடி என்ட்ரி, தொகுதி மக்களிடையேயும் தொண்டர்களிடையேயும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாகனப் பிரசாரமானது ருத்ராவதி பகுதியில் தொடங்கி குண்டடம், தாராபுரம் மற்றும் மூலனூர் ஆகிய முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று தாசர்பட்டி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய வீதிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள் வழியாகச் செல்லும் இந்த ரோடு ஷோ மூலம், தொகுதி முழுவதையும் ஒரே நாளில் தன்வசப்படுத்தி, வாக்குகளை தவெக பக்கம் அறுவடை செய்ய விரிவான திட்டமிடல்கள் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளர் அறிவிக்கப்பட்டது முதலே தாராபுரத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரத்தின் இறுதி நாளில் விஜய்யின் இந்த அதிரடிப் பயணம் எதிரத்தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ரோடு ஷோ நிகழ்வுக்காக தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகப்பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

You May Also Like

More From Author