சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பெய்ஜிங்கில், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து தலைமையமைச்சர் மைக்கேல் மார்ட்டினுடன் 5ஆம் நாள் முற்பகல், பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
2012ஆம் ஆண்டில் இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் நெடுநோக்குக் கூட்டாளியுறவு நிறுவப்பட்டது முதல் இது வரை, இரு தரப்புகளின் வர்த்தகத் தொகை 4 மடங்கு அதிகரித்துள்ளது. அயர்லாந்துடன் இணைந்து பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, வளர்ச்சி வாய்ப்புகளைக் கூட்டாகப் பகிர்ந்துகொண்டு, கூட்டு வளர்ச்சியை நனவாக்க சீனா விரும்புகிறது. சீனாவும் அயர்லாந்தும் பல தரப்புவாதத்திற்கு ஆதரவளிக்கின்றன. சர்வதேச நீதி மற்றும் நேர்மையின் ஊன்றி நின்று, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, உலகின் ஆட்சி முறையை மேலும் நீதி மற்றும் நியாயமான வளர்ச்சிக்குத் தூண்ட வேண்டும் என்றார்.
மார்ட்டி கூறுகையில்,
இரு நாடுகளுக்கிடையில் ஆழ்ந்த, நீண்டகால நட்புறவு உள்ளது. ஐரோப்பிய-சீன உறவு நிதானமாக வளர்ந்து வருவதைப் பேணிக்காப்பது மிகவும் முக்கியம். ஐரோப்பிய-சீன உறவின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு ஆக்கப்பூர்வமாக பங்காற்ற அயர்லாந்து விரும்புகிறது என்றார்.
