அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளப் புறப்பட்ட ஷி ச்சின்பிங்

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 23ஆம் நாள் பிற்பகல் சிறப்பு விமானம் மூலம் பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டார்.

அவருடன் அவரது மனைவி ஃபெங்லியுவான் அம்மையார், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நிரந்தர உறுப்பினரும் மத்திய கமிட்டி அலுவலகத் தலைவர் சாய்ச்சீ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சர் வாங்யீ ஆகியோரும் சென்றனர்.

You May Also Like

More From Author