மூன்று நாடுகளின் ஒத்துழைப்புக்கு ரஷியா மற்றும் இந்தியாவுடன் தொடர்பைப் பராமரிக்கும் சீனா

சீனா, ரஷியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் வளர்ச்சி குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியான் ஜூன் 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்குப் பதிலளிக்கையில், சீனா, ரஷியா, இந்தியா ஆகிய அனைத்தும் புதிதாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளாகும் என்றும், சீரான உறவுகளைப் பராமரிப்பது மூன்று நாடுகளின் சொந்த நலனுக்கு உகந்தது மட்டுமல்லாமல், பிரதேச மற்றும் உலகளாவிய அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் செழிப்புக்குப் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.

மூன்று நாடுகளின் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ரஷியா மற்றும் இந்தியாவுடன் தொடர்பைப் பராமரிக்க சீனா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author