“எதிரி நாடுகளுக்கான பிரிவு” இன்னும் நடைமுறையில் உள்ளது:சீனா

ஐ.நா சாசனத்தின் “எதிரி நாடுகளுக்கான பிரிவை” நீக்க ஜப்பானிய தலைமையமைச்சர் தக்காய்சி சனே வலியுறுத்தியிருப்பது பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோஜியாகுன் 23ஆம் நாள் கூறுகையில், முன்பு தனது ராணுவ வெறிக் குற்றத்தையும் ஐ.நா சாசனத்தின் அனைத்து உள்ளடங்களையும் ஏற்றுக்கொண்ட பின்னரே ஜப்பான் ஐ.நாவில் சேர்ந்தது. எதிரி நாடுகளுக்கான பிரிவு ஐ.நா சாசனத்தின் முக்கிய பகுதியாகும். இது போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கி, இதுவரை முக்கியத்துவம் வாய்ந்த நடைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் வரலாற்றை பின்பற்றி, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் ஆசியாவின் அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்திடமிருந்து நம்பிக்கை பெற வேண்டும் என்று சீனா அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author