சீனாவின் வசந்த விழாவைக் கொண்டாடும் வகையில், ரஷியாவின் மாஸ்கோ, செயின்ட்பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களில் பல்வகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
“மகிழ்ச்சியான வசந்த விழா” என்னும் கோயில் திருவிழா, ஜனவரி 28ம் நாள் மாஸ்கோவிலுள்ள சீன வர்த்தக மையத்தில் துவங்கியது. சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த இந்த வசந்த விழா கொண்டாட்ட நிகழ்ச்சி, உள்ளூர் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதே நாள் மாஸ்கோ நகரின் மையத்தில் அமைந்துள்ள மானேஸ் சதுக்கத்தில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் துவங்கியது. ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சஹரோவா அம்மையார் இது குறித்து கூறுகையில், அனைவரும் மகிழ்ச்சி மற்றும் உடல் நலம் பெறுவதற்கும், மக்களின் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதற்கும் வாழ்த்துக்களையும், வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.