‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு

Estimated read time 1 min read

இந்தியாவி்ல் அதிநவீன AI வளர்ச்சிக்காகவும், AI மாடல்களை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுகு்கு நிதியுதவி வழங்கவும் 20,000 கோடி ரூபாய் கொண்ட நிதியத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

IndiaAI Mission திட்டத்தின் கீழ் Frontier AI மற்றும் Compute Ecosystem-யை மேம்படுத்த சுமார் 20,000 கோடி ரூபாய் வரை புதிய நிதியத்தை உருவாக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

Frontier AI இலக்குகளை அடைவதில் உள்ள முக்கிய தடையை நீக்கவும் அந்நிறுவனங்களுக்கு நீண்ட கால மூலதனத்தை வழங்கவும், GPU கிளஸ்டர்கள் மற்றும் சிறப்புத் தரவு மையங்களை உருவாக்கவும் இந்த நிதி பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது.

AI ஸ்டார்ட்அப்கள், துணிகர மூலதன (VC) நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வழங்குநர்களுடன் நடத்தப்பட்டு வரும் இந்த விவாதங்களில் நாட்டின் AI சுற்றுச் சூழல் அமைப்பை மேம்படுத்த பல்வேறு விஷயங்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

மேம்பட்ட AI மாதிரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஆகும் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனால், பாரம்பரிய துணிகர மூலதனம் மற்றும் அரசு மானியங்கள் மூலம் நிதி திரட்டிப் போட்டியிடுவது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குக் கடினமாக உள்ளது.

நிதியின் அளவு, முதலீட்டு அமைப்பு, நிர்வாகம் மற்றும் அரசின் பங்கு ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும். மேம்பட்ட AI மாதிரிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், அவற்றை ஆதரிக்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் ஆகும் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இந்தியாவின் AI லட்சியங்களை அடைவதில் உள்ள ஒரு முக்கிய தடையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நிதியம் இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேம்பட்ட AI மாடல்களை உருவாக்கும் இந்திய நிறுவனங்களுக்கு நீண்ட கால முதலீட்டு ஆதரவை வழங்குதல், AI மாடல்களைப் பயிற்றுவிப்பதற்குத் தேவையான விலையுயர்ந்த GPU கிளஸ்டர்கள் மற்றும் பிரத்யேக தரவு மையங்களை அமைப்பதற்கு நிதியளித்தல் ஆகியவற்றுக்காக இந்த நிதி வழங்கப் படும் என்று கூறப்படுகிறது.

பாரம்பரிய துணிகர மூலதன வழிகள் மூலம் போதுமான நிதியைப் பெற முடியாத, அதிக அளவிலான ஆரம்பக்கட்ட முதலீடு தேவைப்படும் திட்டங்களுக்காகவே இந்த முதலீட்டுத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.

தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஆரம்பகட்ட முதலீட்டை மத்திய அரசு செய்யும் என்றும் அதன் மூலம் சர்வதேச நிதிக் கழகம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த முன்மொழியப்பட்ட நிதியில் பங்கேற்க முடியுமா என்பது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமான துணிகர மூலதன நிதிகள் 5 முதல் 7 ஆண்டுகள் மட்டுமே முதலீடு செய்யும் நிலையில், இந்த நிதி 12 ஆண்டுகள் வரை நீண்ட கால முதலீட்டு கால அவகாசத்தைக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நாட்டின் AI சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக 10,372 ரூபாய் கோடி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ள மத்திய அரசின் தற்போதைய ‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டத்திற்கு, இந்த முன்மொழியப்பட்ட நிதி துணையாக அமையும் என்று கூறப் படுகிறது.

2027 க்குள் ஒரு மேம்பட்ட AI மாடலைப் பயிற்றுவிக்க 1 பில்லியன் டாலருக்கும் மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த பெரும் செலவை உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளவே மத்திய அரசு இந்த நிதியத்தை உருவாக்கியுள்ளது.

இந்தத் திட்டம், மானிய விலையில் கணினித் திறனுக்கான அணுகலை ஆதரிப்பதோடு, நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வலுப்படுத்தும் பிற முயற்சிகளுடன், உள்நாட்டு அடித்தள மாதிரிகளுக்கும் நிதியுதவி வழங்குகிறது.

You May Also Like

More From Author